Wednesday, January 26, 2011

காரைக்குடி வாலிபருக்கு கத்திகுத்து: 2 பேர் கோர்ட்டில் சரண்

இளையான்குடி:காரைக்குடி டி.டி.,நகர் 6 வது வீதி சோமசுந்தரம் மகன் அருண்குமார் (24). இவர் கடந்த 23ம் தேதி இரவு 11மணிக்கு, டூவீலரில் சென்றபோது, முன்விரோதம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்., மங்கலத்தை சேர்ந்த செல்வம் மகன் சுரேஷ்ஜான்பால் (25) உள்ளிட்ட 3 பேர் கத்தியால் குத்தினர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில், தலைமறைவான வாலிபர்களை காரைக்குடி இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை தேடி வந்தார்.சரண்: இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சுரேஷ் ஜான்பால், அவரது நண்பர் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த பாண்டி (31) ஆகிய இருவரும் இளையான்குடி கோர்ட்டில் மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி முன் சரண் அடைந்தனர்.

No comments:

Post a Comment