சிவகங்கை:பள்ளி, கல்லூரி, உள்ளாட்சி, பொது நல அமைப்புகள் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சம்பத் கொடி ஏற்றினார். மாவட்ட வருவாய் அலுவலர் வேம்புலிங்கம், ராஜசேகரன் எஸ்.பி., மாவட்ட ஊராட்சி தலைவர் பாண்டியன், மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசன், திட்ட அலுவலர் அமானுல்லா, ஆர்.டி.ஓ., க்கள் துர்கா, பன்னீர் செல்வம், கலெக்டர் நேர்முக உதவியாளர்கள் பிரம்மநாயகம்(பொது), சர்புதீன் (ஊராட்சி), அசோகன் (சேமிப்பு), ஆதிதிராவிட நல அலுவலர் முகமது கமால்பாட்ஷா, பிற்பட்டோர் நல அலுவலர் குணசேகரன், முதன்மை கல்வி அலுவலர் செல்லம், தாசில்தார்கள் வளர்மதி, அமிர்தலிங்கம், பிரேம்குமார் பங்கேற்றனர். சுதந்திர போரட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். பயனாளிகள் 33 பேருக்கு 7 லட்ச ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பணியில் சிறந்து விளங்கிய போலீஸ், போக்குவரத்துதுறை, அரசு துறை ஊழியர்களுக்கு சான்று வழங்கப்பட்டது.கலை நிகழ்ச்சி: சிவகங்கை அரசு இசைப்பள்ளி, ஆக்ஸ்போர்டு மெட்ரிக்., பள்ளி, மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்புவனம் வேலம்மாள் மெட்ரிக்., பள்ளி, ராமகிருஷ்ணா துவக்கப்பள்ளி, கோட்டையூர் சிதம்பரம் செட்டியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சி நடந்தது. தினமலர் கிளை அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
ஊழியர்கள் பங்கேற்றனர். சிவகங்கை ராஜா மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் கொடியேற்றினார். ஆசிரியர் சுந்தரராஜன், ஆசிரியர் நடராஜன் பங்கேற்றனர். சோழபுரம் சு.பா.தே.வி., உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கண்ணப்பன் கொடியேற்றினார். பள்ளி செயலாளர் வேங்கடாஜலபதி, ஆசிரியர்கள் பங்கேற்றனர். சோழபுரம் ஜே.ஆர்., நர்சரி பள்ளியில் சு.பா.தே.வி., பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணப்பன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியை ரேணுகாதேவி உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.பிரவலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி தலைவர் முருகன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் வளர்மதி வரவேற்றார். ஆசிரியை தனலட்சுமி, உமா, பட்டதாரி ஆசிரியர்கள் ரேவதி, அமுதா, மீனாட்சி பங்கேற்றனர். கிராமதான நிர்மாண சங்கத்தில் ஆவின் கால்நடைத்துறை டாக்டர் மோகன்தாஸ் முன்னிலையில், பொதுசெயலாளர் உறுமத்தான் கொடியேற்றினார். அலுவலக ஊழியர்கள் வைரம், மலைச்சாமி, மகாலிங்கம் பங்கேற்றனர்.
காட்டு நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கிராம கல்வி குழு தலைவி பூமாதேவி கொடியேற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை மீனாட்சி, ஆசிரியர் பஞ்சுராஜ் பங்கேற்றனர். வீரப்பட்டி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் லெட்சுமணன் வரவேற்றார். கல்விக்குழு தலைவர் அசோகன் கொடியேற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பில்லப்பன், ஆசிரியர்கள் அருளானந்தன், ஆயீஷா பீவி, விஜய், உலகு சவுந்தரவள்ளி, ஹெலன் ரோஸியானா பங்கேற்றனர். இடையமேலூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் சுந்தம்மாள் கொடி ஏற்றினார். உதவி தலைமை ஆசிரியர் காசி வரவேற்றார். தலைமை ஆசிரியர் அழகப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இளையபெருமாள், ஆசிரியர் சாந்தி பங்கேற்றனர். சக்கந்தி சக்தி நர்சரி பள்ளியில் தலைமை ஆசிரியர் உமா வரவேற்றார். தாளாளர் மாரியப்பன் கொடி ஏற்றினார். ஆசிரியர்கள் கார்த்திகைவேணி, கவுரி, சந்திரலேகா, ஜாக்குலின் பங்கேற்றனர்.மேல சாலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சாலூர் ஊராட்சி தலைவர் அழகர் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் அமலி உட்பட ஆசிரியர்கள் பங்கேற்றனர். நம்பிக்கை மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் ஒன்றிய கவுன்சிலர் நிர்மலா கொடியேற்றினார். ஆசிரியர் டேவிட்ஜான் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் சரளா நன்றி கூறினார். மகாத்மா நர்சரி பள்ளியில் தாளா ளர் சரளா தலைமை வகித்தார். முத்துராக்கு கொடியேற்றினார். வசந்தம் உண்டு உறைவிட பள்ளியில் தாளாளர் அருண் தலைமை வகித்தார். முத்துராக்கு கொடியேற்றினார். சிவகங்கை காமராஜர் நகரில் செயலாளர் சிவா தலைமை வகித்தார். தலைவர் ஜான்பாஸ்டின் கொடியேற்றினார். பொருளாளர் கருப்பசாமி நன்றி கூறினார். மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் பாண்டியராஜன் கொடியேற்றினார். துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் இஸ்மாயில், செயற்பொறியாளர் சாமுவேல்ராஜசேகரன், உதவி செயற்பொறியாளர்கள் சின்னையா, சந்திர சேகரன், உதுமான் அலி , உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நாகநர்மதா பங்கேற்றனர். ஆக்ஸ்வர்ட் மெட்ரிக்., பள்ளியில் மணிவண்ணன் கொடியேற்றினார். பள்ளி தாளாளர் சியமளா, வெங்கடேசன் பங்கேற்றனர். சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மாறன் கொடியேற்றினார். ஆசிரியர்கள் காந்தன், கணேஷ், தடியப்பன் பங்கேற்றனர். ஆசிரியர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.நாட்டரசன் கோட்டை எஸ்.வி.வி., சாலா துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை கார்த்திகைராணி கொடியேற்றினார். உதவி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். இடையமேலூர் விக்னேஸ்வரா வித்யாலயா பள்ளியில் தாளாளர் ஜெயதாஸ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கவிதாராணி வரவேற்றார். ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் முத்துராமலிங்கம் கொடியேற்றினார். செயலாளர் ஜானகி, ஆசிரியர்கள் குமரமலர், செல்வராணி பங்கேற்றனர்.சேவா சமாஜத்தில் மதிப்பியல் தலைவர் பகீரத நாச்சியப்பன் தலைமை வகித்தார். அசேபா திட்ட பொறுப்பாளர் தங்கையா கொடி ஏற்றினார். துணை செயலாளர் சுவாமிநாதன், துணை தலைவி செண்பகவல்லி, விடுதி காப்பாளர் கஸ்தூரி பங்கேற்றனர். நல்லாசிரியர் முத்துராமன் நன்றி கூறினார்.
சிவகங்கை நகராட்சியில் தலைவர் நாகராஜன் கொடியேற்றினார். கமிஷனர் சுந்தரமூர்த்தி, பொறியாளர் இளங்கோ, துப்பரவு ஆய்வாளர் ஐயப்பன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.ஆறாவது வார்டு நிகழ்ச்சியில் சுதா தலைமை வகித்தார். கவுன்சிலர் நாச்சியப்பன் கொடியேற்றினார்.காரைக்குடி: அழகப்பா பல்கலை.,யில் துணைவேந்தர் சுடலைமுத்து கொடியேற்றினார். பதிவாளர் மணிமேகலை முன்னிலை வகித்தார். ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பிரேமா, சஞ்சீவ் ராஜா, கிருஷ்ணராஜ், தேர்வாணையர் மாணிக்கவாசகம், நிதி அலுவலர் ரவி சங்கர், டீன் குருமூர்த்தி உட்பட அனைத்து துறை பேராசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.தேவகோட்டை: தியாகிகள் பூங்காவில் காங்., துணை தலைவர் மீராஉசேன் தலைமை வகித்தார். முன்னாள் நகர் தலைவர் நஜூமுதின் கொடியேற்றினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைகருணாநிதி, நகராட்சி தலைவர் வேலுச்சாமி பங்கேற்றனர். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. பன்னீர் செல்வம், டி.எஸ்.பி. அலுவலகத்தில் டி.எஸ்.பி. கணேசன், தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செல்வநாதன் கொடியேற்றினார், 14 வது தொகுதி நகராட்சி நடுநிலை பள்ளியில் தலைமையாசிரியர் வணக்கம் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் கோட்டை கொடியேற்றினார். கவுன்சிலர் அழகிமீனாள், முன்னாள் கவுன்சிலர் கருணாநிதி, ஆசிரியை தமிழ்மணி பங்கேற்றனர். ராமகிருஷ்ண வித்யாலயா நடுநிலை பள்ளியில் நிர்வாக மேலாளர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். டாக்டர் கார்த்திகாயினி கொடியேற்றினார்.
டி பிரிட்டோ மேல்நிலை பள்ளியில் தலைமையாசிரியர் வில்சன் தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் திருநாவுக்கரசு கொடியேற்றினார். மாணவர் முகேஷ் வரவேற்றார். சேக்கமது நன்றி கூறினார். தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் வள்ளுவன் கொடியேற்றினார். கே.வி.பி.,மெட்ரிக்., பள்ளியில் முதல்வர் வசந்தநிலவன்தலைமை வகித்தார். நிறுவனர் கார்மேகம் கொடியேற்றினார். கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தலைவர் பெருமாள் கொடியேற்றினார். பி.டி.ஓ.,க்கள் நாகரத்தினம், கணேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.சிங்கம்புணரி: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தலைவர் பெருமாள் கொடியேற்றினார். பி.டி.ஓ.,க்கள் பாண்டி, செல்லத்துரை முன்னிலை வகித்தனர். துணை தலைவர் பெரியகருப்பன், கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், வாசுகி, சுபா, துணை பி.டிஓ.,க்கள் தவம், ஸ்ரீதர், கோட்டைமலை பங்கேற்றனர். மேலாளர் சையத் நன்றிகூறினார். பேரூராட்சியில் தலைவர் சுசிலா கொடியேற்றினார். துணை தலைவர் முத்துமுகமது முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் திருமாறன், சாகுல் அமீது, குணசேகரன், இளஞ்சேரன்,லாவண்யா,சேவுகன், கிளார்க் கணேசன், சுகாதார மேற்பார்வையாளர் சேரலாதன் பங்கேற்றனர்.
துவக்கப்பள்ளி எண்: 3 ல் தலை மை ஆசிரியர் செல்வி தலைமையில்பேரூராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் கொடியேற்றினார். ஆசிரியர்கள் கவிதா, இதயக்கனி, பர்வதவர்த்தினி, தமிழ்செல்வி பங்கேற்றனர். எஸ்.எஸ்.,மெட்ரிக் பள்ளியில் நிர்வாக அலுவலர் போஸ் தலைமை வகித்தார். சேவுகா லயன்ஸ் சங்க துணை தலைவர் சந்திரசேகர் கொடியேற்றினார். தாளாளர் செந்தில்குமார், பள்ளி முதல்வர் யாஸ்மின் பங்கேற்றனர். அன்னை வேளாங்கண்ணி மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் மின்சிவர்கீஸ் கொடியேற்றினார். பாரிவள்ளல் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் சிவகாமி கொடியேற்றினார், ஆசிரியர்கள் மணிமொழி, சின்னையா பங்கேற்றனர்.ஆதவன் மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதல்வர் உடையப்பன் தலைமை வகித்தார். பேராசிரியர் பாலகுருநாதன் கொடியேற்றினார். நிர்வாக அலுவலர் மாதவன், ஆசிரியர்கள் தேன்மொழி, மணி,சாந்தி பங்கேற்றனர்.பள்ளி எண்: 4ல் தலைமை ஆசிரியர் கீதாராணி தலைமை வகித்தார். பேரூராசி கவுன்சிலர் சுந்தரமூர்த்தி கொடியேற்றினார். ஆசிரியர்கள் நிறைமதி,சாந்தி பங்கேற்றனர்.அரசு மருத்துவமனையில் மருத்துவஅலுவலர் செந்தில்வேலன் கொடியேற்றினார். டாக்டர்கள் மலையரசி, செந்தில் பங்கேற்றனர்.
போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் கொடியேற்றினார். எஸ்.ஐ.,க்கள் பூமிநாதன், சக்திவேல் பங்கேற்றனர். தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர்(பொறுப்பு) சேகர் கொடியேற்றினார். ஏட்டு காமராஜ், மீனாட்சி சுந்தரம், வீரமணி, பிரகாஷ், ரஞ்சித் பங்கேற்றனர்.திருப்புத்தூர்: ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில் செயலாளர் ராமேஸ்வரன் கொடியேற்றினார். முதல்வர் மோகன்ராஜ், என்.சி.சி., அலுவலர் ஜெயக்குமார் பங்கேற்றனர். ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்வியியல் கல்லூரியில்ஆறுமுகராஜன் கொடியேற்றினார். முதல்வர் ஜெகதீசன் பங்கேற்றார். ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் மெட்ரிக்., பள்ளியில் செயலாளர் ஆறுமுகராஜன் கொடியேற்றினார்.
போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் கொடியேற்றினார். எஸ்.ஐ.,க்கள் பூமிநாதன், சக்திவேல் பங்கேற்றனர். தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர்(பொறுப்பு) சேகர் கொடியேற்றினார். ஏட்டு காமராஜ், மீனாட்சி சுந்தரம், வீரமணி, பிரகாஷ், ரஞ்சித் பங்கேற்றனர்.திருப்புத்தூர்: ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில் செயலாளர் ராமேஸ்வரன் கொடியேற்றினார். முதல்வர் மோகன்ராஜ், என்.சி.சி., அலுவலர் ஜெயக்குமார் பங்கேற்றனர். ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்வியியல் கல்லூரியில்ஆறுமுகராஜன் கொடியேற்றினார். முதல்வர் ஜெகதீசன் பங்கேற்றார். ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் மெட்ரிக்., பள்ளியில் செயலாளர் ஆறுமுகராஜன் கொடியேற்றினார்.
முதல்வர் அமுதாராணி பங்கேற்றார். நேஷனல் அகடாமி ஆப் கேட்டரிங் கல்லூரியில் முதல்வர் சுரேஷ் பிரபாகர் கொடியேற்றினார். மனித உரிமை கழக நிர்வாகி சண்முகம் பங்கேற்றார். கிறிஸ்துராஜா மெட்ரிக்., பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அருணாசலம் தலைமை வகித்தார். முதல்வர் விக்டர் வரவேற்றார். கே.வைரவன்பட்டி ஊராட்சி தலைவர் சிவமணி கொடியேற்றினார். மின்துறை முன்னாள் பொறியாளர் பிரபாகரன் பங்கேற்றார். ஆசிரியர்கள் ராஜேஷ், கரோலின், சங்கீதா பங்கேற்றனர். தாளாளர் ரூபன் நன்றி கூறினார். பாபா அமீர்பாதுஷா மெட்ரிக்., பள்ளியில் தாளாளர் அமிர் பாதுஷா தலைமை வகித்தார். முதல்வர் ரபீக்ராஜா வரவேற்றார். பேராசிரியர் கலைதாசன் கொடியேற்றினார். பேராசிரியர் சுப்பிரமணியன், பொறியாளர் பிரபாகரன், ஆசிரியர் ராமநாதன் பங்கேற்றனர்.
லிம்ரா நர்சரி பள்ளியில் தாளாளர் இஸ்மாயில் தலைமை வகித்தார்.பேரூராட்சி தலைவர் சாக்ளா கொடியேற்றினார். நிர்வாக அலுவலர் முகமது தாஜுதின், தலைமையாசிரியை ஹைருன்னிசா பங்கேற்றனர். புதிய பாரதம் நேரு நேஷனல் பள்ளியில் தாளாளர் அப்துல் பரீத் தலைமை வகித்தார். முதல்வர் அப்துல்வாஹித் முன்னிலை வகித்தார். பாரதி மன்றத் தலைவர் சுப்பிரமணியன் கொடியேற்றினார். ஆசிரியை கனகாதேவி, சித்ராதேவி, முன்னாள் தலைமை ஆசிரியர் கவுசலை, கவுன்சிலர்கள் காளிமுத்து, முகமதுயாசின், தேவராஜ் பங்கேற்றனர். கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.,மெய்யப்ப செட்டியார் மெட்ரிக்., பள்ளியில் தமிழ்மன்ற தந்தை சிவராமன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் கொடியேற்றினார். ஊராட்சி துணை தலைவர் செல்வமணி, தாளாளர் பழனியப்பன், செயலாளர் குணாளன் பங்கேற்றனர். மாங்குடி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியை மார்கரெட் சாந்தகுமாரி கொடியேற்றினார். ஆசிரியை சாந்தி பங்கேற்றார். தென்மாபட்டு இந்திராகாந்தி நர்சரி பள்ளியில் தாளாளர் ஏகாம்பாள்தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை பாக்யலட்சுமி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயக்கொடி கொடியேற்றினார். ஆசிரியை மணிமேகலை நன்றி கூறினார். நகர் போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி., முருகேசன் கொடியேற்றினார். இன்ஸ்பெக்டர்சேது, எஸ்.ஐ., நவநீதகிருஷ்ணன் பங்கேற்றனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் வள்ளி கொடியேற்றினார். பி.டி.ஓ., க்கள்பழனிச்சாமி, காளிதாஸ், துணைத் தலைவர் கணேசன், கவுன்சிலர்கள் சந்திரன், பொய்யாமொழி, அய்யாவு, அந்தோணி, மேலாளர் பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர். பேரூராட்சியில் தலைவர் சாக்ளா கொடியேற்றினார். செயல் அலுவலர் அமானுல்லா, துணை தலைவர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment